ADDED : ஆக 28, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
மறைமலை நகர், ஆக. 29-–
மறைமலை நகர் அடுத்த செங்குன்றம் மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிரிவாசன், 17. இவர், கடந்தாண்டு சிங்க பெருமாள் கோவில் அரசு பள்ளியில் பிளஸ் – 2 படித்தபோது மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவி அவரது காதலை ஏற்காததால், கிரிவாசன் கல்லுாரியில் சேராமல் வீட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மறைமலை நகர் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
