/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்டுடியோ பூட்டை உடைத்து மூன்று கேமராக்கள் ஆட்டை
/
ஸ்டுடியோ பூட்டை உடைத்து மூன்று கேமராக்கள் ஆட்டை
ADDED : நவ 19, 2024 06:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்:செய்யூர் அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி, 29. எல்லையம்மன் கோவில் பகுதியில், சொந்தமாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தார்.
ஸ்டுடியோவில் இருந்த இரண்டு கெனான் கேமரா, ஒரு நிக்கான் கேமரா மற்றும் ஒரு ஸ்மார்ட் போனை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, செய்யூர் காவல் நிலையத்தில் முனுசாமி புகார் அளித்தார். திருட்டு குறித்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.