/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பகிங்ஹாம் கால்வாய் சிறுபாலம் சீரமைத்து பயன்பாட்டுக்கு திறப்பு
/
பகிங்ஹாம் கால்வாய் சிறுபாலம் சீரமைத்து பயன்பாட்டுக்கு திறப்பு
பகிங்ஹாம் கால்வாய் சிறுபாலம் சீரமைத்து பயன்பாட்டுக்கு திறப்பு
பகிங்ஹாம் கால்வாய் சிறுபாலம் சீரமைத்து பயன்பாட்டுக்கு திறப்பு
ADDED : நவ 04, 2024 03:01 AM

நீலாங்கரை:ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் வகையில், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் பகுதியில், பகிங்ஹாம் கால்வாயில், 10 அடி அகலம், 50 அடி நீளம் உடைய தரைப்பாலங்கள் உள்ளன.
ஓ.எம்.ஆரில் இருந்து துரித பயணத்திற்கு, இந்த பாலம் வழியாக செல்கின்றனர். பாலத்தில், ஒரு கார் மட்டும் செல்லும் ஒரு வழிபாதையும், பக்கவாட்டில் பாதசாரிகள் நடக்கும் பாதையும் உள்ளது.
ஒரு திசையில் வாகனங்கள் செல்லும்போது, எதிர் திசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரு திசைகளிலும் வாகனங்கள் வந்தால், விபத்து மற்றும் நெரிசல் ஏற்படும்
இந்நிலையில், துரைப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரை நோக்கி செல்லும், பாண்டியன் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் விரிசல் விழுந்தது.
வாகனங்கள் சென்றால், பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
பாலத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, நீர்வளத்துறை சார்பில், பாலம் சீரமைக்கப்பட்டது. மைய பகுதியில், தடுப்பு அமைத்து தடிமனான இரும்பு பலகையால் சமன்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் திறக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.