/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம்: 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு
/
துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம்: 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு
துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம்: 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு
துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம்: 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு
ADDED : பிப் 09, 2024 12:40 AM
தாம்பரம்:மேற்கு தாம்பரம், மீனாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன், 60; வழக்கறிஞர். கடந்த 6ம் தேதி மாலை, இவரது வீட்டு உட்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
அங்கு கிடந்த துப்பாக்கி தோட்டாவை, போலீசார் கைப்பற்றினர். அடுத்த நாள், காந்தி சாலையிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கார் நிறுத்தத்தில் கிடந்த, மேலும் ஆறு தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள், 'ஏ.கே.47' துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடியவை என கூறப்படுகிறது. கிழக்கு தாம்பரம் இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில், வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் போது, தோட்டாக்கள் தவறுதலாக குடியிருப்பு பகுதியில் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி, தொடர் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக, விமானப்படை அதிகாரிகளிடம், தாம்பரம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர்.
அவர்கள் உறுதி செய்த பின்னரே, சரியான தகவல் தெரியவரும். இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக, தாம்பரம் போலீசார் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து விளைவிப்பது, சேதம் விளைவிப்பது, ஆயுதங்களை ஆஜாக்கிரதையாக கையாண்டது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும், விமானப்படை மையத்தில் இருந்து வரும் தகவலை பொறுத்தே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

