/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பஸ் அறிவிப்பு ஒலிபெருக்கி பழுது மதுராந்தகத்தில் பயணியர் அவதி
/
பஸ் அறிவிப்பு ஒலிபெருக்கி பழுது மதுராந்தகத்தில் பயணியர் அவதி
பஸ் அறிவிப்பு ஒலிபெருக்கி பழுது மதுராந்தகத்தில் பயணியர் அவதி
பஸ் அறிவிப்பு ஒலிபெருக்கி பழுது மதுராந்தகத்தில் பயணியர் அவதி
ADDED : டிச 14, 2024 11:24 PM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ் 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூனாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு பணிக்குச் செல்வோர் என, 5,000க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பேருந்து நிலையத்தில், பேருந்துகள் செல்லும் ஊரின் பெயர், புறப்படும் நேரம் ஆகியவை ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டு வந்தன.
இது, பயணியருக்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது, இந்த ஒலிபெருக்கி பழுதடைந்து உள்ளது.
இதனால், பயணியர் நேரக்கட்டுப்பாட்டு அலுவலரிடம் சென்று, பேருந்துகள் குறித்து கேட்டு அறிய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால், வயதானவர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, பழுதடைந்துள்ள ஒலிபெருக்கியை சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.