sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருப்போரூரில் பயண சீட்டு மையம் பேருந்து பயணியர் எதிர்பார்ப்பு

/

திருப்போரூரில் பயண சீட்டு மையம் பேருந்து பயணியர் எதிர்பார்ப்பு

திருப்போரூரில் பயண சீட்டு மையம் பேருந்து பயணியர் எதிர்பார்ப்பு

திருப்போரூரில் பயண சீட்டு மையம் பேருந்து பயணியர் எதிர்பார்ப்பு


ADDED : டிச 27, 2024 02:25 AM

Google News

ADDED : டிச 27, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்க எல்லைகள், கடந்த 2007ம் ஆண்டு, 35 கி.மீ.,யிலிருந்து, 50 கி.மீ.,க்கு விரிவாக்கம் செய்யப்பட்டன.

இதன் காரணமாக திருப்போரூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருப்போரூர் தடத்தில், ஆரம்பத்தில் 25 பேருந்துகள் இயக்கப்பட்டன.

தற்போது தாம்பரம், தி.நகர், பிராட்வே, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, 200க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இடவசதி, கூரை, குடிநீர் என, அனைத்து வசதிகளுடன் கூடிய நேர காப்பாளர் அலுவலகமும் உள்ளது.

இருங்கிருந்து கேளம்பாக்கம், கோவளம் மற்றும் சிறுசேரி சிப்காட் பேருந்து நிலையத்திற்கும், 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருப்போரூர் சுற்றுவட்டார கிராம மக்கள், மாணவர்கள் என அனைவரும் தாம்பரம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், சிறுசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர்.

ஆனால் இவர்கள் மாதாந்திர பயணச்சீட்டு வாங்க திருவான்மியூர், அடையாறு, தாம்பரம், கிளாம்பாக்கம் பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் கால விரயம், வீண் அலைச்சலால் அவதிப்படுகின்றனர். மேலும், அனைத்து பகுதிகளிலிருந்தும் பலர் அங்கு மாதாந்திர பயணச்சீட்டு வாங்க அங்கு வருவதால், அவ்வப்போது கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது.

எனவே, திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பயணியர், மாணவர்களின் நலன் கருதி, திருப்போரூர் பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு மையம் அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us