/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புலிப்பாக்கத்தில் அடுத்தடுத்து பேருந்துகள் மோதி விபத்து
/
புலிப்பாக்கத்தில் அடுத்தடுத்து பேருந்துகள் மோதி விபத்து
புலிப்பாக்கத்தில் அடுத்தடுத்து பேருந்துகள் மோதி விபத்து
புலிப்பாக்கத்தில் அடுத்தடுத்து பேருந்துகள் மோதி விபத்து
ADDED : அக் 22, 2025 11:02 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகில் புலிப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில், அடுத்தடுத்து பேருந்துகள் மோதியதில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலுார் நோக்கி, அரசு பேருந்து நேற்று காலை ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தது.
செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் சந்திப்பு அருகில் சென்ற போது, பின்னால் சென்னையில் இருந்து படாளம் நோக்கி வந்த தனியார் மருத்துவக் கல்லுாரி பேருந்து, அரசு பேருந்தின் மீது மோதியது.
அப்போது, தனியார் கல்லுாரி பேருந்தின் பின்புறம், சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து மோதியது.
இந்த விபத்தில், மூன்று பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கியதில், பயணியர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து காரணமாக, இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

