sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 தொழில் பழகுநர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

/

 தொழில் பழகுநர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

 தொழில் பழகுநர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

 தொழில் பழகுநர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : பிப் 28, 2026 05:49 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்பாக்கம்: கல்பாக்கம் பாவினி அணுமின் நிறுவனத்தில், தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்பாக்கத்தில், 'பாவினி' எனப்படும் பாரதிய நபிக்ய வித்யூத் நிகாம் என்ற பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிறுவனம், 500 மெ.வா., மின் உற்பத்தி திறனில், பி.எப்.பி.ஆர்., எனப்படும் முன்மாதிரி வேக ஈனுலை மின் உற்பத்தி நிலையம் அமைத்துள்ளது. மின் உற்பத்திக்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும், டிரேட் அப்ரென்டிஸ் எனப்படும் தொழில் பழகுநர் பயிற்சியை, நிறுவனம் பல்வேறு பிரிவுகளில், குறிப்பிட்ட நபர்களுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.

பிட்டர், போட்டோகிராபர், மெஷினிஸ்ட், மெயின்டனென்ஸ் மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், இன்ஸ்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், ரெப்ஜிரேஷன் மற்றும் 'ஏசி' மெக்கானிக், மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க மார்ச் 16ம் தேதி கடைசி நாள். மேலும் விபரங்களை, https://bhavini.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம்.






      Dinamalar
      Follow us