/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் தடகள பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
செங்கையில் தடகள பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஏப் 12, 2025 08:47 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தடகள விளையாட்டு போட்டிக்கு, பயிற்சி அளிக்க, பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில், ஸ்டார் அகாடமி, மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் தடகள விளையாட்டு மே 1ம் தேதி துவக்கப்பட உள்ளது.
இம்மையத்தில், பயிற்சியாளராக பயிற்சி வழங்க 50 வயதிற்குட்பட்ட தடகள விளையாட்டு பயிற்றுநருக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு, மாதாந்திர பயிற்சி கட்டணமாக 25,000 ரூபாய் வழங்கப்படும். இது தற்காலி பணியாகும்.
பயிற்சி மையத்தில், பயிற்சி மேற்கொள்ள தடகள விளையாட்டில் ஆர்வமுடைய 12 வயது முதல் 21 வயதுவரை உள்ள 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவியர்கள் என, மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்கி, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும்.
பயிற்சி மேற்கொள்வதற்கு விளையாட்டு வீரர் , வீராங்கனைகளுக்கான தேர்வு வரும் 28ம் தேதி, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில் நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பிங்களை, செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில், வாங்கி, 20ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரிலோ அல்லது dsochengalpattu@gmail.com என்ற இணையத்தின் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, மொபைல் எண் 74017 03461 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.