/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கலைச்செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
கலைச்செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 04, 2025 10:31 PM
மாமல்லபுரம்:மரபு வழி மற்றும் நவீன பாணி சிற்ப, ஓவிய கலைஞர்கள், கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
மரபு வழி, நவீன பாணி ஆகிய நுண்கலை துறைகளில் சிற்ப கலைஞர், ஓவிய கலைஞர்களின் அரிய சாதனை, சேவைகளை பாராட்டி, ஆண்டுதோறும் ஆறு பேருக்கு, தமிழக கலை, பண்பாட்டுத் துறை சார்பில், கலைச்செம்மல் விருது வழங்கப்படுகிறது.
இதில், 50 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களில் சிறந்த படைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது மற்றும் தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. 2025 - 26ம் ஆண்டிற்கான விருதிற்கு, 50 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள் விண்ணப்பிக்குமாறு, அத்துறை தற்போது அறிவித்துள்ளது.
கலைஞர்களே இதற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது தகுதி வாய்ந்த படைப்பாளர்களை அரசு நிறுவனம், தனிநபர் பரிந்துரைக்கலாம்.
மரபு வழி, நவீன பாணி ஆகியவற்றில், ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மாநில, தேசிய, சர்வதேச கலை கண்காட்சிகளில், அவர்களது படைப்புகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
படைப்பாளர்களின் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த, 20 கலை படைப்புகளின், 'ஏ4' அளவு வண்ண புகைப்படம், படைப்பாளர் குறித்த பத்திரிகை செய்தியுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், கலை படைப்பு குறித்து வெளியான கட்டுரை, சான்றுகள், விண்ணப்பதாரர் புகைப்படம், தன்விபர குறிப்பு ஆகியவற்றுடன், வரும் 30ம் தேதிக்குள், தமிழக கலை, பண்பாட்டுத் துறை தலைமையகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு இயக்குநர், கலை, பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம் இரண்டாம் தளம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 8 என்ற முகவரியிலும், 044 - 2819 3157 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.