/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தலைமை சட்ட உதவி வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
தலைமை சட்ட உதவி வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தலைமை சட்ட உதவி வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தலைமை சட்ட உதவி வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : பிப் 12, 2025 12:27 AM
செங்கல்பட்டுசெங்கல்பட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில், துணை தலைமை சட்ட உதவி வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிக்கை:
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு இயங்கி வருகிறது. இங்கு, இரண்டு துணை தலைமை சட்ட உதவி வழக்கறிஞர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதன் அனைத்து விரிவான விபரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தின் https;//chengalpattu.dcourts.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்களை, வரும் 21ம் தேதிக்குள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட நீதிமன்ற வளாகம், செங்கல்பட்டு மாவட்டம் என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நேர்முக தேர்வு வரும் மார்ச் 3ம் தேதி, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.