தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற அழைப்பு

நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற அழைப்பு

நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற அழைப்பு


ADDED : செப் 11, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு, செப். 12–

நுண்ணீர் பாசன மானிய திட்டத்தில், பயன்பெற, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, செங்கல்பட்டு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வேளாண் துறை இணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், வேளாண் பயிர்களுக்கு, பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில், 875 ஏக்கர் பரப்பில், நுண்ணீர் பாசனம் அமைக்க, 1.62 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 70 எக்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர் உள்ளவர்களுக்கு, நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும். பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.

இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், நீர் பயன்பாட்டு திறன் அதிகரித்து, அதிக விளைச்சல் அளிப்பதற்கும், உர பயன்பாட்டில் சிக்கனம், பயிர் விளைச்சல் ஒரே சமயத்தில் முதிர்ச்சியடையும்.

மேலும் விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us