/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதியோர் இல்லத்தை பராமரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
/
முதியோர் இல்லத்தை பராமரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
முதியோர் இல்லத்தை பராமரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
முதியோர் இல்லத்தை பராமரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
ADDED : செப் 24, 2025 09:27 PM
செங்கல்பட்டு:தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தங்கும் விடுதியில், முதியோர் இல்லம் துவக்கப்பட உள்ளது. இதை பராமரிக்க, அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தையூர் பகுதியில், த மிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்திற்குச் சொந்தமான தங்கும் விடுதியில், முதியோர் இல்லம் துவக்கப்பட உள்ளது.
இங்கு, தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து 60 வயது பூர்த்தி அடைந்து, குடும்பத்தினரால் சரியான கவனிப்பும், பராமரிப்பும் இல்லாமல் உள்ள, 50 தொழிலாளர்கள் தங்கும் வகையில், உணவு மற்றும் உறைவிட வசதி உள்ளது.
இம்முதியோர் இல்லத்தை நிர்வகிப்பது மற்றும் முறையாக பராமரிப்பது போன்ற பணிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கும், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
முதியோர் இல்லத்தை பராமரிக்க விருப்பமுள்ள அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில், வரும் 30ம் தேதி நேரில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.