/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகள் அடையாள எண் 28ம் தேதிக்குள் பெற அழைப்பு
/
விவசாயிகள் அடையாள எண் 28ம் தேதிக்குள் பெற அழைப்பு
விவசாயிகள் அடையாள எண் 28ம் தேதிக்குள் பெற அழைப்பு
விவசாயிகள் அடையாள எண் 28ம் தேதிக்குள் பெற அழைப்பு
ADDED : டிச 20, 2025 05:39 AM
செங்கல்பட்டு: விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள், வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி வெளியிட்ட அறிக்கை:
மத்திய, மாநில அரசின் திட்டங்களில் பயன் பெற, விவசாய அடையாள எண் அவசியம் தேவை.
ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள எண் என்பது, இனிவரும் காலங்களில் அத்தியாவசியமான ஒன்று.
22வது பிரதம மந்திரி கவுரவ நிதி பெறுவதற்கும், பயிர் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கும், கண்டிப்பாக விவசாய அடையாள எண் தேவை.
எனவே, விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள் அனைவரும், தங்களுக்கு அருகிலுள்ள கணினி சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை, தோட்டக்கலை அலுவலகங்களுக்கு சென்று, தங்கள் ஆதார், மொபைல் போன் எண், பட்டா விபரங்களுடன், வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்து, விவசாய அடையாள எண் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

