/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீக்கனாங்குப்பத்தில் கால்வாய் பணி
/
சீக்கனாங்குப்பத்தில் கால்வாய் பணி
ADDED : டிச 10, 2024 12:09 AM

செய்யூர், டசெய்யூர் அருகே சீக்கனாங்குப்பம் ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட சீக்கனாங்குப்பம் காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை ஓரத்தில் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசி வந்தது.
மேலும், குடிநீருடன் கழிவுநீர் கலந்து பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் நிலவியது.
இதுகுறித்து நம் நாளிதழில், கடந்த மாதம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், பெருமாள் கோவில் முதல் தெருவில் 3.18 லட்சம் ரூபாயில், 177 அடி மற்றும் பெருமாள் கோவில் இரண்டாவது தெருவில், 4.24 லட்சம் ரூபாயில், 236 அடி நீளத்திற்கு, சாலை ஓரத்தில் கால்வாய் அமைக்கும் பணி, கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்டு, தொடர்ந்து நடந்து வருகிறது.