/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
/
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
ADDED : டிச 30, 2025 06:25 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி ஜி.எஸ்.டி., சாலையில், சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
கடலுார் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன், 39; லாரி டிரைவர்.
நேற்று மதியம் 'எய்ச்சர்' சரக்கு வாகனத்தில் லோடு ஏற்றிக்கொண்டு, சென்னை நோக்கி ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தார்.
செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி பகுதியில் சென்ற போது, முன்னால் சென்ற வாகனம் திடீர் 'பிரேக்' போட்டதால், கதிரேசனும் சரக்கு வாகனத்தை உடனே நிறுத்தி உள்ளார்.
அப்போது, பின்னால் அருப்புக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற 'டாடா இண்டிகா' கார், எய்ச்சர் சரக்கு வாகனத்தின் பின்புறம் மோதி, சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்டது.
நல்வாய்ப்பாக, காரில் பயணம் செய்த அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இருளன், 45, அவரது குடும்பத்தினர் மற்றும் காரை ஓட்டி வந்த வீரபாண்டி, 36, உள்ளிட்டோர் காயமின்றி தப்பினர்.
இந்த விபத்து காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

