ADDED : ஏப் 26, 2026 04:25 PM

அ நிறம் | அளவு
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் - - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் ஏப்ரல் 25 அன்று மாலை 'டாடா' இண்டிகா கார் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றது.
திருக்கச்சூர் அடுத்த கொளத்துார் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரை ஓட்டிய நபர் நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், அவரை மீட்டு சிங்கபெருமாள் கோவிலில் உள்ள அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த பாலுார் போலீசார் கிரேன் உதவியுடன் காரை மீட்டு, விசாரிக்கின்றனர்.
