/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டில் தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
/
செங்கல்பட்டில் தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
ADDED : ஜூன் 08, 2025 02:03 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நத்தம் பகுதியில் பாப்புலர் மோட்டார் சர்வீஸ் சென்டர் செயல்ப்பட்டு வருகிறது. நேற்று மாலை சர்வீஸ் சென்டரில் இருந்த 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தை ஊழியர் கார்த்திகேயன் என்பவர் ஓட்டினார். ஜி.எஸ்.டி., சாலையில் மதுராந்தகம் மார்க்கத்தில் பழவேலி அருகில் சென்ற போது வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.
கார்த்திகேயன் வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி விட்டு செங்கல்பட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் வாகனம் தீப்பற்றி எரியத் துவங்கியது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
செங்கல்பட்டு தாலுகா போலீசார், விசாரிக்கின்றனர்.