/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இல்லீடு அரசு பள்ளிக்கு 'கேட்' சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
/
இல்லீடு அரசு பள்ளிக்கு 'கேட்' சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
இல்லீடு அரசு பள்ளிக்கு 'கேட்' சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
இல்லீடு அரசு பள்ளிக்கு 'கேட்' சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
ADDED : ஜூலை 14, 2025 01:04 AM

சித்தாமூர்:இல்லீடு அரசு ஆரம்ப பள்ளிக்கு,'கேட்' அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட இல்லீடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 48 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவாயில் பகுதியில் இரும்பு 'கேட்' இல்லாததால், பகல் நேரத்தில் நாய், மாடு போன்ற கால்நடைகள் பள்ளி வளாகத்தில் வலம் வருகின்றன.
பள்ளி முடிந்து மாணவர்கள் சென்ற பின், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, மது அருந்துகின்றனர்.
எனவே, பள்ளி நுழைவாயில் பகுதியில் 'கேட்' அமைக்க, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.