/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் மாடுகளை திருடும் 'சிசிடிவி' காட்சிகள் பரவல்
/
செங்கையில் மாடுகளை திருடும் 'சிசிடிவி' காட்சிகள் பரவல்
செங்கையில் மாடுகளை திருடும் 'சிசிடிவி' காட்சிகள் பரவல்
செங்கையில் மாடுகளை திருடும் 'சிசிடிவி' காட்சிகள் பரவல்
ADDED : செப் 08, 2025 12:27 AM

மறைமலைநகர்:செங்கல்பட்டு நகர பகுதியில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சாலையில் சென்ற மாடுகளை சரக்கு வாகனத்தில் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விவசாயம் பிரதான தொழில். தவிர பலர் மாடு, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.
குறிப்பாக சிங்கபெருமாள் கோவில், கொண்டமங்கலம், கருநிலம், கொளத்துார், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பரவலாக ஆடு வளர்க்கப்படுகின்றன.
மேய்ச்சலுக்கு, ஆடுகளை மலைகள் மற்றும் அறுவடை முடிந்த வயல்களுக்கு ஓட்டி செல்வர். இவ்வாறு ஓட்டி செல்லும் போது இரு சக்கர வாகனங்கள் கார்களில் வரும் மர்ம நபர்கள் நோட்டமிட்டு ஆடு மேய்ப்போர் அசறும் நேரத்தில் ஆடுகளையும், மாடுகளையும் கடத்தி செல்கின்றனர். வாகனங்களில் செல்வதால் அவர்களை பிடிக்க முடிவதில்லை.
ஆடு மாடுகள் திருடப்படுவது குறித்து எந்த காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்படுவது இல்லை.இதன் காரணமாக பலர் புகார் அளிக்க சென்றால் கூடுதல் செலவு என, காவல் நிலையம் செல்வதில்லை.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக செங்கல்பட்டு நகர பகுதிகளாக பழைய ஜி.எஸ்.டி., சாலை அனுமந்தபுத்தேரி, மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம கும்பலால் மாடுகள் சரக்கு வாகனங்களில் திருடப்பட்டு வருகின்றன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.