ADDED : மே 14, 2026 06:33 AM

செய்யூர்: வன்னியநல்லுார் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த சிமென்ட் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சித்தாமூர் அடுத்த வன்னியநல்லுார் ஊராட்சியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட வன்னியநல்லுார் கிராமத்தில் உள்ள தெருக்களில் மக்கள் பயன்பாட்டிற்காக 15 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலை முழுதும் சேதமடைந்து உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அதேபோல் ஈஸ்வரன் கோவில்தெரு மற்றும் சந்திகோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை சேத மடைந்து மண் சாலையாக மாறியுள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த சிமென்ட் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
