மக்கள் தொகை கணக்கெடுப்பு 3,320 பணியாளர்கள் நியமனம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு 3,320 பணியாளர்கள் நியமனம்
ADDED : ஜூலை 18, 2026 03:51 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த 3,320 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் வீரப்பன் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் களப்பணியாளர்கள் 2,868 பேர்; மேற்பார்வை யாளர்கள் 452 பேர் என மொத்தம் 3,320 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு, கடந்த 6ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
பயிற்சி முடித்தவர்கள், மாவட்டம் முழுதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
ஆக., 1ம் தேதி முதல் 30 வரை நடக்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு, பொதுமக்கள் சரியான விபரங்களை தெரிவித்து, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
