/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு துவக்க பள்ளியில் நுாற்றாண்டு விழா
/
அரசு துவக்க பள்ளியில் நுாற்றாண்டு விழா
ADDED : ஏப் 05, 2025 10:10 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 1923ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதில், 150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளி துவக்கப்பட்டு, நுாறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் அய்யப்பன் தலைமை வகித்தார்.
முன்னாள் மாணவர்கள், அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்பள்ளியின் கல்வி புரவலர் கெஜராஜன் 52, 000 ரூபாய் மதிப்பில் 5 பீரோக்கள் வழங்கினார். நெல்லிக்குப்பம் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி மற்றும் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

