/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாம்பாக்கம் பள்ளியில் நுாற்றாண்டு விழா
/
மாம்பாக்கம் பள்ளியில் நுாற்றாண்டு விழா
ADDED : மார் 23, 2025 08:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்குகிறது.
இப்பள்ளி, 1925ம் ஆண்டு துவக்கப்பட்டு, தற்போது 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பள்ளியின் நுாற்றாண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பள்ளியின் வளர்ச்சி அனுபவங்கள் குறித்து பேசினர்.
ஆண்டு விழாவில், பள்ளி மாணவ -- மாணவியர் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியர் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.