/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரத்ததானம் வழங்கியோருக்கு சான்றிதழ்
/
ரத்ததானம் வழங்கியோருக்கு சான்றிதழ்
ADDED : ஜூன் 14, 2025 01:22 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், ரத்த வங்கி உள்ளது. இங்கு, தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்து வருகின்றனர்.
இதில், 50க்கும் அதிக முறை ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, மருத்துவமனை முதல்வர் டாக்டர் அரசு தலைமையில், நேற்று நடந்தது.
கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில், சப்- கலெக்டர் மாலதி ஹெலன், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் ஜோதிகுமார் மற்றும் டாக்டர்கள், மருத்துவ கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
அப்போது, ரத்த வங்கியை வேறு இடத்தில் மாற்றி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு, கலெக்டரிடம் முதல்வர் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்தார்.