/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துாய்மை பணியாளர்களுக்கு சான்று வழங்கும் விழா
/
துாய்மை பணியாளர்களுக்கு சான்று வழங்கும் விழா
ADDED : அக் 08, 2024 01:39 AM
கூடுவாஞ்சேரி,
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், நகராட்சி துாய்மை பணியாளர்கள், குப்பையை தரம் பிரித்து பெற்று, நகராட்சி வாயிலாக கிடங்கிற்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், துாய்மை சேவை இயக்கத்தின் சார்பில், ஆண்டு தோறும் சிறப்பாக பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி சார்பில், சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று நடந்த விழாவில், நகராட்சியில் பணிபுரிந்து வரும் துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவை சார்ந்த, 300க்கும் மேற்பட்டோருக்கு, சான்று மற்றும் கேடயம் வழங்கும் விழா நடந்தது.
இதில், நகராட்சிதலைவர் கார்த்திக், கமிஷனர் தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, சிறப்பாக பணிபுரிந்த 45 துாய்மை பணியாளர்களுக்கு, சான்று மற்றும் கேடயம் வழங்கினர்.
தொடர்ந்து, குப்பை சேகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும், நகராட்சிசார்பில் கேடயம் வழங்கப்பட்டது. இதில், சுகாதாரத்துறை அலுவலர் நாகராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.