/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது
/
செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது
ADDED : பிப் 05, 2025 09:08 PM
அச்சிறுபாக்கம்:ஒரத்தி காவல் எல்லைக்கு உட்பட்ட கொங்கரை, மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மனைவி இந்திராணி, 80.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே இருந்த போது, கொங்கரை, மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி, 47, என்பவர், இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதுகுறித்த புகாரின்படி, ஒரத்தி போலீசார் விசாரித்தனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, புதுச்சேரி பகுதியில் தலைமறைவாக இருந்த கருணாமூர்த்தியை நேற்று கைது செய்து, அவரிடம் இருந்து தங்க செயினை மீட்டு, இந்திராணியிடம் ஒப்படைத்தனர்.
பின், வழக்கு பதிவு செய்து, அவரை மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைத்தனர்.