/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேய்ந்து தலை சாய்ந்த மின் கம்பம் சட்டமங்கலம் கிராமத்தினர் அச்சம்
/
தேய்ந்து தலை சாய்ந்த மின் கம்பம் சட்டமங்கலம் கிராமத்தினர் அச்சம்
தேய்ந்து தலை சாய்ந்த மின் கம்பம் சட்டமங்கலம் கிராமத்தினர் அச்சம்
தேய்ந்து தலை சாய்ந்த மின் கம்பம் சட்டமங்கலம் கிராமத்தினர் அச்சம்
ADDED : செப் 28, 2024 01:10 AM

மறைமலை நகர்:மறைமலைநகர் நகராட்சி, சட்டமங்கலத்தில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மறைமலைநகர் மின்வாரிய அலுவலகம் வாயிலாக சாலையோரங்களில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த பகுதியில் மறைமலைநகர் -- ஆப்பூர் சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் மேல்பகுதி உடைந்து, சாய்ந்த நிலையில்உள்ளன.
இதன் காரணமாக, இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
சட்டமங்கலத்தில் சாலையோரம் உள்ள மூன்று மின்கம்பங்கள் உடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து காணப்படுகின்றன.
அதேபோல, அருகில் உள்ள மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை எதிரே உள்ள மின் கம்பங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.
எனவே, சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.