/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சதுரங்கப்பட்டினம் சாலையில் அபாய வளைவுகளால் ஆபத்து
/
சதுரங்கப்பட்டினம் சாலையில் அபாய வளைவுகளால் ஆபத்து
ADDED : செப் 23, 2024 05:58 AM

சதுரங்கப்பட்டினம் : கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதியில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் சதுரங்கப்பட்டினம் - திருத்தணி சாலை துவங்குகிறது.
அச்சாலைக்கு சற்றுத்தொலைவு தெற்கில், உட்புற பகுதி சாலையின் குறுகிய பகுதியில், அடுத்தடுத்து குறுகிய வளைவுகள் உள்ளன. வளைவுகளில், பிற தெருக்கள் இணைகின்றன.
விபத்து அபாய வளைவுகளாக இருந்தும், வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. அரசு பேருந்துகள், பிற வாகனங்கள் என, ஏராளமாக கடக்கின்றன.
இருசக்கர வாகன பயணியர், அபாயம் உணராமல் வேகமாக சென்று, அடிக்கடி விபத்துகளில் பாதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகனம் ஓட்டும் முதியோர், பெண்கள், வளைவில் அச்சத்துடன் செல்கின்றனர். இரண்டு வளைவு பகுதிகளிலும், வேகத்தடை அமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.