/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் கோடை மழை 2 மணிநேரம் மின்தடையால் அவதி
/
செங்கை மாவட்டத்தில் கோடை மழை 2 மணிநேரம் மின்தடையால் அவதி
செங்கை மாவட்டத்தில் கோடை மழை 2 மணிநேரம் மின்தடையால் அவதி
செங்கை மாவட்டத்தில் கோடை மழை 2 மணிநேரம் மின்தடையால் அவதி
ADDED : ஏப் 04, 2025 02:18 AM

திருப்போரூர்:திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கோடை மழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. மேலும், கோடை வெப்பம் தணிந்து, மக்கள் நிம்மதியடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில், பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது.
இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில், சுட்டெரித்த வெப்பத்தை குறைக்கும் வகையில், நேற்று திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சில மணி நேரம் மழை பெய்தது. தொடர்ந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த கோடை மழையால், ஓ.எம்.ஆர்., சாலையில் திருப்போரூர், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. சாலைகளில் தேங்கிய மழைநீரால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
* கிராமங்களில் மின்தடை
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று, மழை பெய்தது. இதனால், கிராமப்புறங்களில், இரண்டு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
இதனால் பள்ளி, கல்லுாரி, வேலைக்குச் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டத்தில் செங்கல்பட்டு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம், மறைமலைநகர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், லேசான இடியுடன் கூடிய மழை பெய்த போது, சில பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டது. இந்த மின்தடை பிரச்னையை உடனுக்குடன், மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்ததாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

