/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை திட்ட பணிகள் உறுதிமொழி குழு ஆய்வு
/
செங்கை திட்ட பணிகள் உறுதிமொழி குழு ஆய்வு
ADDED : டிச 10, 2024 08:11 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், அரசு உறுதிமொழிக் குழு கூட்டம், இதன் தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏ.,வுமான வேல்முருகன் தலைமையில், இன்று நடக்கிறது.
கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள உறுதி மொழிகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.
மேலும் இக்குழு, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் புனரமைக்கும் பணி, மரகதப் பூங்காவில் ஒளிரும் பூங்கா, அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரியில் மாணவர் தங்கும் விடுதி, தொழிற்பயிற்சிகூடங்கள் அமைப்பது உள்ளிட்ட பல திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.
எனவே, மாவட்ட வளர்ச்சிக்கு தேவையானவை குறித்து குழுவினரிடம், பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

