/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி:மறைமலை நகர் வேகத்தடைக்கு வண்ணம் பூச வலியுறுத்தல்
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி:மறைமலை நகர் வேகத்தடைக்கு வண்ணம் பூச வலியுறுத்தல்
செங்கல்பட்டு: புகார் பெட்டி:மறைமலை நகர் வேகத்தடைக்கு வண்ணம் பூச வலியுறுத்தல்
செங்கல்பட்டு: புகார் பெட்டி:மறைமலை நகர் வேகத்தடைக்கு வண்ணம் பூச வலியுறுத்தல்
ADDED : மே 02, 2024 01:19 AM

மறைமலை நகர் வேகத்தடைக்கு வண்ணம் பூச வலியுறுத்தல்
மறைமலை நகர் நகராட்சி, திருவள்ளுவர் சாலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சாலையில், தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை, கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு, மூன்று இடங்களில் புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இந்த வேகத்தடை வண்ணம் பூசப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த வேகத்தடைகளில் வண்ணம் பூச, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பூபதி, மறைமலை நகர்.
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள பகுதிகளுக்கு, அதிக அளவிலான பயணியர் தினமும் சென்று வருகின்றனர்.
காலை மற்றும் மாலை வேளைகளில், இந்த ரயில் நிலையத்தில், பயணியர் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
இங்கு பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி முறையாக செய்யப்படவில்லை. குடிநீர் வசதி இன்றி, நடைமேடைகளில் பயணியர் சிரமம் அடைகின்றனர்.
எனவே, நடைமேடைகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோ.கார்த்திக், கூடுவாஞ்சேரி.
சுவாமியை மறைக்கும் கேட் திறந்து வைக்க கோரிக்கை
திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள சில சன்னிதிகளில், அவ்வப்போது பாதுகாப்பு கேட் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால், சுவாமியின் முகம் முழுமையாக தெரியாமல் மறைக்கப்படுகிறது. வழிபடும் பக்தர்கள் திருப்தி இல்லாமல் வழிபட்டு செல்கின்றனர்.
எனவே, சுவாமி முகம் மறைக்காத வகையில், பாதுகாப்பு கேட்டை திறந்து வைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.விஜயன், திருப்போரூர்.
தெரு விளக்குகள் எரியாததால் அருள் நகரில் பெண்கள் அவதி
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, முதலாவது வார்டுக்கு உட்பட்ட அருள் நகர், மீனாட்சி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள், கடந்த சில நாட்களாக எரியவில்லை.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இரவு நேரத்தில் பணிக்கு சென்று திரும்பும் பெண்கள் மற்றும் முதியவர்கள், இதனால் சிரமம் அடைகின்றனர். எனவே, எரியாத தெரு விளக்கை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.சரவணகுமார், அருள் நகர்.
ஊரப்பாக்கம் சாலையை சீரமைக்க வேண்டுகோள்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஐந்து கண் பாலம் முதல், அருள் நகர் வரை உள்ள சாலைகள், மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை, மழை மற்றும் புயலால் கடும் சேதம் அடைந்தது.
ஆனால், இன்று வரை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. அதனால், இருசக்கர வாகனம் முதற்கொண்டு, ஆட்டோ வரை தட்டு தடுமாறி செல்லும் நிலை உள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்.
- மு.நாகேஸ்வரன், அருள் நகர்.

