/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு : புகார் பெட்டி:சாலையோரத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
/
செங்கல்பட்டு : புகார் பெட்டி:சாலையோரத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
செங்கல்பட்டு : புகார் பெட்டி:சாலையோரத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
செங்கல்பட்டு : புகார் பெட்டி:சாலையோரத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
ADDED : செப் 12, 2024 01:34 AM

சாலையோரத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
திருப்போரூர்- - ஆலத்துார் இடையே உள்ள ஓ.எம்.ஆர்., சாலையில், குடியிருப்பு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிகக் கடைகள், திருமண மண்டபங்கள், புதிய மனை பிரிவுகள், கல்வி, தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இச்சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. திருப்போரூர், தண்டலம் பகுதிகளில், இந்த சாலையின் நடுவே உள்ள மீடியனில், மண் குவியல் அதிகரித்துள்ளது.
வாகனங்கள் செல்லும்போது, மண் குவியல் காற்றில் பறப்பதால், இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சாலையில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.வெங்கடேசன், திருப்போரூர்.
ஒளிராத தெரு விளக்குகள் கூடுவாஞ்சேரியில் இருள்
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, முதலாவது வார்டுக்கு உட்பட்ட அருள் நகர், சேரன் தெரு, யமுனை தெரு உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதியில் எரியாத நிலையில் உள்ள தெரு விளக்குகளை சீரமைத்து, மீண்டும் ஒளிர வைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.அன்னலட்சுமி, அருள் நகர்.
பயணியர் நிழற்குடை அமைக்க மேலகண்டையில் எதிர்பார்ப்பு
பவுஞ்சூர் அடுத்த மேலகண்டை கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். தினசரி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் வேலைக்கு செல்வோர், மதுராந்தகம் - கூவத்துார் சாலையில் இருந்த நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர்.
சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்ததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், மாநில நெடுஞ்சாலைத் துறை வாயிலாக நிழற்குடை அகற்றப்பட்டது.
சாலை விரிவாக்கப் பணிகள், கடந்த ஆண்டு முடிந்த நிலையில், தற்போது வரை நிழற்குடை அமைக்கப்படாததால், தினசரி பேருந்திற்காக காத்திருப்போர், நீண்ட நேரம் வெயிலில் நின்று அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மேலகண்டை கிராமத்தில் புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கணேசன், மேலகண்டை.

