/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி;தென்மேல்பாக்கம் சாலையில் மின் விளக்குகள் பழுதால் பீதி

ADDED : டிச 11, 2024 11:48 PM

சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையை பயன்படுத்தி தென்மேல்பாக்கம், அஞ்சூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அடிப்படை தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், தென்மேல்பாக்கம் -- சிங்கபெருமாள் கோவில் வரை, 2 கி.மீ., துாரம் தென் மேல்பாக்கம் ஊராட்சி சார்பில், மின் கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் மொத்தம் 26 மின் கம்பங்கள் உள்ள நிலையில், அதில் 7 மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. மேலும், இந்த சாலையில் தென்மேல்பாக்கம் அம்பேத்கர் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள உயர் கோபுர மின் விளக்கும், பல மாதங்களாக எரியாமல் பழுதடைந்து உள்ளது. இதன் காரணமாக, சாலை இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, இந்த சாலையில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.