sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி: செங்கண்மால் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி: செங்கண்மால் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு: புகார் பெட்டி: செங்கண்மால் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு: புகார் பெட்டி: செங்கண்மால் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை


ADDED : ஜன 03, 2024 09:42 PM

Google News

ADDED : ஜன 03, 2024 09:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கண்மால் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை


திருப்போரூர் அடுத்த செங்கண்மால் கிராமத்தில், செங்கண்மாலீஸ்வரர் கோவில் அருகே குளம் உள்ளது. இக்குளம், தற்போது பெய்த மழையால் நிரம்பியுள்ளது.

குளத்தை ஒட்டி கோவில் உட்பட குடியிருப்பு வீடுகள், வணிக கடைகள் உள்ளன. ஆனால், குளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் தடுப்பு வேலி இல்லாததால், பக்தர்கள், குழந்தைகள், வயதானோர் நிலைதடுமாறி விழுந்து, பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, குளத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.குமார், செங்கண்மால்.

காயரம்பேடு விஷ்ணுபிரியா நகரில் சாலையில் தேங்கியுள்ள குப்பை


காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா நகர் நுழைவாயிலில், சாலையில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இந்த குப்பை, அப்பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பையை நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

அதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, காயரம்பேடு ஊராட்சி அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சாலையில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.சிந்துஜா, விஷ்ணுபிரியா நகர்.

கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் பயணியருக்கு இடையூறாக வாகன நிறுத்தம்


கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் மற்றும் பயணியருக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இங்கு செயல்படும் இருசக்கர வாகன கட்டண பார்க்கிங், ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர, பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

இது குறித்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கும், பயணியருக்கும் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ராமன், கூடுவாஞ்சேரி.

அச்சிறுபாக்கம் இருளர் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்


அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 13வது வார்டு பகுதியில், இருளர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு, முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிறார்கள், 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இருளர் குடியிருப்புக்கு செல்லும் சாலை பகுதியில், மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சிறிய நீர்ப்பிடிப்பு குட்டைகளில் துாண்டில் கொண்டு மீன் பிடிக்க செல்லும் இருளர் குடியிருப்பு சிறார்கள், மின் கம்பிகளால் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

எனவே, மின் வாரியத் துறையினர், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜ், அச்சிறுபாக்கம்.

பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி கொட்டி எரிக்கப்படும் குப்பை


மாமல்லபுரத்தில், பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி, நெடுஞ்சாலை உள்ளது. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர், கல்பாக்கம் ஊழியர்கள் அவ்வழியே செல்கின்றனர். பொதுமக்கள் நடைபயிற்சி செல்கின்றனர்.

அங்கு, சாலையை ஒட்டி தொடர்ந்து குப்பை குவிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. அடிக்கடி அப்பகுதியில் குப்பை எரிக்கப்படுவதா, சாலையில் நச்சுப்புகை பரவுகிறது. அதனால், அவ்வழியே செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

சாலையோரம் குப்பை கொட்டி எரிக்கப்படுவதை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.தமிழரசன், மாமல்லபுரம்.






      Dinamalar
      Follow us