/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு : புகார் பெட்டி;தண்டலத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டுகோள்

ADDED : மே 30, 2024 12:59 AM

தண்டலத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டுகோள்
சித்தாமூர் அருகே உள்ள தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் தெருவின் ஒருபுறத்தில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் மழைநீர் வடிகால்வாயை கழிவுநீர் கால்வாயாக பயன்படுத்துகின்றனர்.
மற்றொரு புறத்தில் கால்வாய் வசதி இல்லாததால், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், சாலை ஓரத்தில் தேங்குவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- க.சிதம்பரம், சித்தாமூர்.