/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் செங்கழுநீர்ஓடை மக்கள் வேண்டுகோள்
/
அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் செங்கழுநீர்ஓடை மக்கள் வேண்டுகோள்
அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் செங்கழுநீர்ஓடை மக்கள் வேண்டுகோள்
அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் செங்கழுநீர்ஓடை மக்கள் வேண்டுகோள்
ADDED : நவ 04, 2025 09:40 PM
திருப்போரூர்: செங்கழுநீர்ஓடை கிராமத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், மானாமதி ஊராட்சி, செங்கழுநீர்ஓடை கிராமத்தில் செயல்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்ததால், சில ஆண்டுகளாக வாடகை வீட்டில், அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில், 10க் கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
இதே வீட்டில், அங்கன்வாடி மையத்திற்கு தேவையான அரிசி, சத்துணவு மாவு உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைக்கப் பட்டுள்ளன.
இங்கு, போதிய இடவசதி இல்லாததால், குழந்தைகள் விளையாடுவதற்கும், கல்வி கற்பதற்கும் சிரமப்படுகின்றனர்.
பாதுகாப்பு கருதி, தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப, பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
இதனால், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட வேண்டுமென, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, செங்கழுநீர்ஓடை கிராமத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

