ADDED : அக் 18, 2026 05:21 PM
மாமல்லபுரம்: கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நடந்த ‘சென்னை சைக்ளோத்தான்’ போட்டியில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று உற்சாகமடைந்தனர்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு நிறுவனமும், எச்.சி.எல்., நிறுவனமும் இணந்து சென்னை சைக்ளோத்தான் போட்டியை, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், தொடர்ந்து நடத்தி வருகிறது.
கோவளம் – இளந்தோப்பு – கோவளம் இடையே, 54 கி.மீ., தொழில்முறை பந்தயம்; கோவளம் – வடநெம்மேலி – கோவளம் இடையே, 28 கி.மீ., அமெச்சூர் பந்தயம்; கோவளம் – திருவிடந்தை – கோவளம் இடையே, 10 கி.மீ., போதை எதிர்ப்பு பசுமை பந்தயம் உள்ளிட்ட பிரிவுகளில் நே ற்று போட்டிகள் நடத்தப்பட்டன.தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாதரெட்டி, இந்த போட்டியை தொடங்கி வைத்தார்.
காலை 6:00 மணி முதல், 9:45 மணி வரை போட்டி நடந்தது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட சைக்கிளிங் வீரர்கள், வீராங்கணையர் பங்கேற்றனர்.
