/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாலிபால் அரையிறுதிக்கு சென்னை அணிகள் தகுதி
/
வாலிபால் அரையிறுதிக்கு சென்னை அணிகள் தகுதி
ADDED : பிப் 18, 2025 06:41 AM

சென்னை : அகில இந்திய சிவீல் சர்வீசஸ் வாலிபால் போட்டியில், இருபாலரிலும், சென்னை அணிகள் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
மத்திய சிவில் சர்வீசஸ் கலாசார மற்றும் விளையாட்டு வாரியம் சார்பில், அகில இந்திய சிவில் வாலிபால் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கின்றன.
இதில், கொச்சி, தமிழகம், குஜராத், மும்பை உட்பட நாடு முழுதும் இருந்து, ஆண்களில் 36 அணிகள்,பெண்களில் 22 அணிகள் என, மொத்தம் 58 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் நடந்த காலிறுதி ஆட்டத்தில், ஆண்களில் சென்னை அணி, 25 - 21,18 - 25, 25 - 18 என்ற கணக்கில் மும்பையையும், டில்லி அணி, 25 - 22, 25 - 2 என்ற கணக்கில்ராஜஸ்தான் அணியையும் தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறின. புதுச்சேரி அணி, 25 - 16, 21 - 25, 25 - 13 என்ற கணக்கில் கேரளாவையும்வீழ்த்தியது.
அதேபோல், பெண்களில், சென்னை அணி, 25 - 15, 25 - 8 என்ற கணக்கில் டில்லியையும், கோல்கட்டா அணி, 25 - 7, 25 - 10 என்ற கணக்கில் மஹாராஷ்டிராவையும், பெங்களூரு அணி, 25 - 13, 25 - 17 என்ற கணக்கில் ஹரியானாவையும் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ஆண்களில் கொச்சின்- டில்லியும், சென்னை - புதுச்சேரியும்;பெண்களில் சென்னை - டில்லியும், கோல்கட்டா - பெங்களூரு அணிகளும் அரை இறுதியில்,பலப் பரீட்சை நடத்தஉள்ளன.

