/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடலில் மூழ்கி பலியான தந்தை, மகள்கள்: முதல்வர் நிவாரணம்
/
கடலில் மூழ்கி பலியான தந்தை, மகள்கள்: முதல்வர் நிவாரணம்
கடலில் மூழ்கி பலியான தந்தை, மகள்கள்: முதல்வர் நிவாரணம்
கடலில் மூழ்கி பலியான தந்தை, மகள்கள்: முதல்வர் நிவாரணம்
ADDED : அக் 02, 2025 10:46 PM
சென்னை,
திருப்போரூர் அருகே, கடலில் மூழ்கி தந்தை மற்றும் இரு மகள்கள் பலியான நிலையில், குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரைக்கு, சென்னை அகரம் பகுதியில் இருந்து 17 பேர், செப்., 28ம் தேதி சுற்றுலா சென்றுள்ளனர்.
பெரம்பூர், சக்கரபாணி தோட்டத்தை சேர்ந்த வெங்கடேசன், 36, கடலில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரது மகள்கள் கார்த்திகா, 17, துளசி, 16, ஆகியோர் அலையில் அடித்து செல்லப்பட்டு, 30ம் தேதி, இருவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இந்த துயர செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த மூவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.