ADDED : நவ 24, 2024 08:05 PM
மறைமலை நகர்:காஞ்சிபுரம் அடுத்த மேட்டுகுப்பத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் நித்தியா, 4, என்ற பெண் குழந்தை உள்ளது. ரவி, பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.
கடந்த வாரம், ரவி குடும்பத்துடன் செங்கல்பட்டு அடுத்த தேவனுார் பகுதியில், உறவினர் வீட்டின் அருகில் தற்காலிகமாக குடிசை அமைத்து தங்கி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, ரவி மற்றும் அவரது மனைவி இருவரும், குழந்தை நித்தியாவை வீட்டில் விட்டு விட்டு, பாட்டில் சேகரிக்க சென்றனர்.
மீண்டும் வந்து பார்த்த போது, குழந்தை மாயமானது தெரிய வந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால், ரவி பாலுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.