/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழந்தை சடலம் குப்பையில் மீட்பு
/
குழந்தை சடலம் குப்பையில் மீட்பு
ADDED : ஜன 03, 2025 12:53 AM
வானகரம், மதுரவாயல் அடுத்த, வானகரம் ஊராட்சி, ஓடமா நகர் கண்ணியம்மன் கோவில் பகுதியில், துாய்மை பணியாளர்கள் நேற்று, சுகாதார பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கிருந்த ஒரு குப்பை தொட்டியில், துணி சுற்றப்பட்ட நிலையில் பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடந்ததை கண்டறிந்தனர்.
தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
வீட்டிலேயே பிரசவம் பார்த்து குழந்தை இறந்ததால் சடலமாக வீசி சென்றனரா அல்லது முறை தவறிய உறவால் பிறந்த குழந்தையை கொன்று வீசினரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

