ADDED : ஏப் 06, 2025 01:50 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சின்னவெண்மணி பகுதியில் ஓணம்பாக்கம் செல்லும் தார்ச்சாலை 7 கி.மீ., நீளம் உள்ளது. இச்சாலை ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
சமந்திபுரம், ஓணம்பாக்கம், கல்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளது.
இதில் சின்னவெண்மணியில் இருந்து செல்லும் 4 கி.மீ., நீள சாலை கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருந்ததால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் பொது மக்கள் சிரமப்பட்டனர்.
சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்து நிலையில், 2023-24 பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை நடுவே 6 சிறுபாலங்கள் அமைத்து, 3.9 கி.மீ., நீளத்திற்கு சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.