/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்திரை கிருத்திகை பால்காவடி எலப்பாக்கத்தில் விமரிசை
/
சித்திரை கிருத்திகை பால்காவடி எலப்பாக்கத்தில் விமரிசை
சித்திரை கிருத்திகை பால்காவடி எலப்பாக்கத்தில் விமரிசை
சித்திரை கிருத்திகை பால்காவடி எலப்பாக்கத்தில் விமரிசை
ADDED : ஏப் 29, 2025 11:48 PM

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள சின்மய விநாயகர், பாலமுருகன் கோவிலில், 65-வது ஆண்டு சித்திரைக் கிருத்திகை பால் காவடி பெருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.
நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு மங்கல இசையுடன், மூலவர் சந்தன காப்பு அலங்காரத்துடன் விழா நிகழ்ச்சிகள் நடந்தன.
காலை 7:00 மணிக்கு சேவல் கொடியேற்றுதலுடன் விழா தொடங்கி, மூலவர் சன்னிதியில் உள்ள சின்மய விநாயகர், பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது.
பின், 7:00 மணிக்கு மேல், எலப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, விரதமிருந்து காப்பு அணிந்த பக்தர்கள், பால் காவடி, வேல் காவடி, பறவை காவடி எடுத்து, முக்கிய வீதிகளின் வழியாக சென்று நேர்த்திக் கடனை செலுத்தினர்.
நண்பகல் 1:00 மணியளவில், மும்மூர்த்திகளுக்கு மஹா சிறப்பு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு மஹா தீபாராதனையும் நடந்தது.
பின், இரவு, 2:00 மணிக்கு, மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில், சின்மய விநாயகர் மற்றும் பாலமுருகன் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

