/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா ரூ.15 கோடியில் பணிகள் நிறைவு
/
கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா ரூ.15 கோடியில் பணிகள் நிறைவு
கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா ரூ.15 கோடியில் பணிகள் நிறைவு
கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா ரூ.15 கோடியில் பணிகள் நிறைவு
ADDED : அக் 23, 2024 01:29 AM

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், பயணியரின் வசதிக்காக, 16 ஏக்கர் பரப்பளவில், 15.20 கோடி மதிப்பீட்டில், புதிய காலநிலை பூங்கா அமைக்கும் பணிகள், நிறைவுபெறும் நிலையில் உள்ளன.
இந்த பூங்கா அமைக்கும் பணிகளை, நேற்று காலை கலெக்டர் அருண்ராஜ், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆகியோர், துறை சார்ந்த அதிகாரிகளுடன் பார்வையிட்டனர்.
பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே அமைக்கப்பட்டு வரும் புதிய காலநிலை பூங்கா, வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணியர் இளைப்பாறும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காவில், பதியம் போட்டு வளர்க்கப்பட்டுள்ள பூச்செடிகள், அழகிய நடைபாதை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள், 15.20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கும் வகையில், பல்வேறு விளையாட்டு சாதனங்கள் மற்றும் 1,500 புதிய வகை மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
இந்த பூங்கா பணிகள், தற்போது 90 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 10 சதவீத பணிகளையும் பூர்த்தி செய்துவிட்டு, விரைவில் முதல்வர் திறந்து வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பது குறித்து, மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.