/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயன்பாட்டுக்கு வந்த காலநிலை பூங்கா
/
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயன்பாட்டுக்கு வந்த காலநிலை பூங்கா
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயன்பாட்டுக்கு வந்த காலநிலை பூங்கா
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயன்பாட்டுக்கு வந்த காலநிலை பூங்கா
ADDED : டிச 07, 2024 08:23 PM
கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்துள்ள, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து முனையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள்,
அரசு விரைவு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் சென்று வருகின்றன.
இப்பேருந்து முனையத்திற்கு, தினமும் 30000 க்கும் மேற்பட்ட பயணியரும், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் லட்சத்துக்கும் அதிகமான பயணியர் வந்து செல்கின்றனர்.
இந்த பேருந்து நிலையத்திற்கு, வரும் பயணியர் பயன்பெறும் வகையில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் 15 கோடி ரூபாய் செலவில் காலநிலை பூங்கா அமைப்பதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின் பூங்காவிற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த பூங்காவில் தொல்லியல் விளக்க மையம், அகழிகள் , மழை நீர் குளங்கள், உயர்மட்ட நடைபாதை, மரத்தோட்டம், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற உபகரணங்கள், சிலைகள், விளையாட்டு மைதானம், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய, அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன.
பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியருக்கு மட்டுமல்லாமல் , பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பூங்கா நிறுவப்பட்டுள்ளது.
நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பூங்காவை திறந்து வைத்தார். கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.