/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நில தொகுப்பு திட்டம் குறித்து கருத்துகூற சி.எம்.டி.ஏ., அவகாசம்
/
நில தொகுப்பு திட்டம் குறித்து கருத்துகூற சி.எம்.டி.ஏ., அவகாசம்
நில தொகுப்பு திட்டம் குறித்து கருத்துகூற சி.எம்.டி.ஏ., அவகாசம்
நில தொகுப்பு திட்டம் குறித்து கருத்துகூற சி.எம்.டி.ஏ., அவகாசம்
ADDED : பிப் 18, 2025 03:47 AM
சென்னை: தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் செயல்படுத்தப்பட உள்ள நில தொகுப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து, இம்மாத இறுதிக்குள் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
மத்திய அரசின், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி கிராமங்களில், நில தொகுப்பு முறையிலான மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இங்கு காலியாக உள்ள தனியார் நிலங்கள் மொத்தமாக தொகுக்கப்பட்டு, திட்டமிட்ட நகர்ப்புற பகுதியாக மேம்படுத்தப்படும்.
தரமான சாலை, பூங்காக்கள் என அனைத்து வசதிகளும் அடங்கிய மனைப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும். இதில், பெறப்படும் 600 ஏக்கர் நிலத்தில், 60 சதவீத நிலங்கள் மேம்படுத்தப்பட்ட மனைகளாக, நில உரிமையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
இதை எதிர்த்து, அப்பகுதி விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தடை உத்தரவு பிறப்பிக்காத நிலையில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் பணிகளை தொடர்ந்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலங்களில், இத்திட்டத்துக்கு தேவைப்படாத பாகங்களை விடுவிக்க முடிவானது.
இதன் அடிப்படையில் புதிய வரைபடம், நிலங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதுகுறித்த விபரங்களை, செங்கல்பட்டு மாவட்ட அரசிதழ் வாயிலாக, டிச.,30 ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, 60 நாட்களுக்குள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அரசிதழ் அறிவிப்பை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, மாடம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி மக்கள், இதுகுறித்து தங்கள் கருத்துகளை, பிப்ரவரி இறுதிக்குள் தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

