ADDED : அக் 24, 2026 07:17 PM

செங்கல்பட்டு: இளநிலை ஆய்வாளருக்கு ஓராண்டு காலம் பயிற்சி வழங்க வலியுறுத்தி, கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்கத்தினர் இன்று (அக்.,24) செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசு கூட்டுறவுத்துறை மற்றும் அரசு ஊழியர் சங்கம் சார்பில்
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுரின் விஜய் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு துறையில், அனைத்து நிலைகளிலும் நிறுத்திவைக்கப்பட்ட, பொது பணியிட மாறுதல்களை அமல்படுத்த வேண்டும்.
இளநிலை ஆய்வாளர் பயிற்சி காலத்தை ஓராண்டில் இருந்து, மூன்று மாதங்களாக குறைத்ததை ரத்து செய்ய வேண்டும். இளநிலை ஆய்வாளர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். என அவர்கள் வலியுறுத்தினர்.
இதில், மாவட்ட செயலர் மகேந்திரபாபு, நிர்வாகிகள் வேலு, காந்திமதி, சத்தியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
