/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாவரவியல் பூங்கா இடம் கலெக்டர் ஆய்வு
/
தாவரவியல் பூங்கா இடம் கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 18, 2025 01:47 AM

மறைமலைநகர்:மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட கடம்பூர் பகுதியில் உள்ள 137.65 ஹெக்டேர் அரசு நிலத்தில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழக வனத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இந்த இடத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, மறைமலை நகர் நகராட்சி ஆணையர் ரமேஷ், செங்கல்பட்டு வட்டாட்சியர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மறைமலை நகர் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடம்பூர் - மறைமலை நகர் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அருண் ராஜ் கூறினார்.