sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கிய கலெக்டர்

/

 ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கிய கலெக்டர்

 ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கிய கலெக்டர்

 ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கிய கலெக்டர்


ADDED : ஜன 24, 2026 05:53 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கலெக்டர் சினேகா துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

சட்டசபை தேர்தலுக்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சீரமைக்கும் பணிகள், மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தன.

அதன் பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை, அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் சினேகா, தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு போடுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை, கலெக்டர் சினேகா, நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

இதேபோன்று, செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகம், மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லுார் ஆகிய தாலுகா அலுவலகங்களில், ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us